2286 Students of Chennai's Amirta Institute Secure Hospitality Jobs

2286 Students of Chennai's Amirta Institute Secure Hospitality Jobs





2286 A record setting achievement with 100% employability 

Chennai, Tamil Nadu, India

At a stretch, 2286 students of Chennai’s Amirta Hotel Management Colleges in Chennai have secured positions in the hospitality industry and set an employment record.


The institute has recently conducted a job fair at its campus where 160 Star Properties of Chennai, Karur, Bengaluru, and Mumbai participated.



Reputed hotels like ITC Grand Chola, Taj Group, Hyatt Regency, The Park, Accord Metropolitan, Oberoi Group, Fortune Group, Radisson Blu, Clarks Exoctica Bangalore, Kohinoor Asiana, Ramada, Confluence, Feathers, Turyaa, GRT Grand, Somerset Greenways, and MGM Resorts, offered jobs to students who are in their final year of studies and yet to get graduated.

Students across various streams of Hotel Management including Diploma in Hospitality Management; Diploma in Hotel Management; Advanced Professional Diploma in Hotel Management & Catering Science; Diploma in Food Production; B.Sc (Catering Science & Hotel Management); participated in the job fair. For details, call 8939200700 or visit www.chennaisamirta.com

“This is a first-of-its-kind experience in the country witnessing participation of numerous star hotels in a job fair conducted by a single institute,” said Mr. R. Boominathan, CEO of the institute. 

“All of our students who have been interviewed were selected, as the hospitality experts were pleased with the subject knowledge, conduct and skills showcased by our students. Our institute’s teachings are far away from rote methods practised elsewhere. We are committed to imparting knowledge that is of value in real time. We train students giving focus on practical ways of learning,” he added.

About Chennais Amirta:

Chennais Amirta International Institute of Hotel Management in Chennai  is an institution providing an ideal atmosphere for dynamic and focused learning. It is a brand that has a rich legacy and provides opportunities for participating in the new dimensions of hospitality. The institute’s success lies on the faculties and the students themselves. We believe that a person’s potential is defined by the work that one do in the present. That is the reason, passion for learning is given more importance than high marks and grades.


Source : businesswireindia.com
தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் - விமர்சனம்

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் - விமர்சனம்


தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் 



நடிகர்   : ஜெய்
நடிகை  :  யாமி கௌதம்
இயக்குனர் :   பிரேம் சாய்
இசை   : கார்த்திக்
ஓளிப்பதிவு  :   சத்யா பொன்மார்





ஜெய் கல்லூரி படிப்பை பாதியிலே முடித்துவிட்டு ஊரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னை வரும் ஜெய் தனது மாமா விடிவி கணேஷுடன் தங்கிக் கொண்டு, அவர் சொல்லும் ஒவ்வொரு வேலைக்கும் சென்றுவிட்டு, பாதியிலேயே அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி திரும்பி வருகிறார்.

இந்நிலையில், ஜெய் கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பன் சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவரும் கூடவே சென்று வருகிறார். அப்போது, ஒருநாள் நாயகி யாமி கௌதமை பார்க்கும் ஜெய் அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளை தினமும் சந்திப்பதற்காக அவள் இருக்கும் ஏரியாவில் கொரியர் சப்ளை செய்யும் பணிக்கு சேர்கிறார். கொரியர் சப்ளை செய்வதுபோல் அவளை தினமும் சந்தித்து தனது காதலை வளர்க்கிறார்.

ஒருகட்டத்தில் யாமி கௌதமும் ஜெய் மீது காதல்வயப்படுகிறார். இதற்கிடையில், சென்னையில் மிகப்பெரிய டாக்டரான அஸ்டோஸ் ரானா, சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு வேலைகளை செய்து, அந்த கருமுட்டைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து அதன்மூலம் பல கோடிகள் சம்பாதித்து வருகிறார்.

இதை அறியும் தம்பி ராமையா, ராணாவை நேரடியாக எதிர்க்கமுடியாது என்பதற்காக சமூக ஆர்வலான நாசரின் உதவியை நாடுகிறார். ராணா செய்துவரும் தில்லுமுல்லுகள் பற்றிய விவரங்களை சேகரித்து அதை நாசருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறார்.

அந்த விவரங்கள் அடங்கிய பார்சலை சப்ளை செய்யும் பொறுப்பு ஜெய்க்கு வருகிறது. மறுபுறம் தம்பி ராமையா தன்னைப் பற்றிய விவரங்களை பார்சலாக அனுப்பிய விஷயம் ராணாவுக்கு தெரிய வருகிறது. அது நாசரிடம் சென்றடையாமல் எப்படி தடுப்பது என்ற முயற்சியில் இறங்குகிறார்.

இறுதியில், நாசரின் கைக்கு அந்த பார்சல் கிடைத்ததா? அல்லது, அந்த பார்சலை அடைவதற்கு ராணா எந்தமாதிரியான முயற்சிகளை எடுத்தார்? என்பதே மீதிக்கதை.

ஜெய் ஹீரோயிசம் இல்லாத ஹீரோவாக மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் ஜெய்யின் நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது. நாயகியை பார்ப்பதற்காக இவர் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது.

பாலிவுட் வரவான நடிகை யாமி கௌதமுக்கு இப்படத்தில் பெரியதாக வேலை இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். விடிவி கணேஷ், சந்தானம் ரெண்டு பேரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள். சந்தானம் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் அனைத்தும் புதிதாக கேட்பதுபோலவே இருப்பது சிறப்பு.

டாக்டராக அஸ்டோஸ் ராணாவின் நடிப்பு மிரட்டும்படியாக இல்லை. அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். நாசர், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் கருக்கலைப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய வியாபாரம் இருப்பதாக இப்படத்தில் இயக்குனர் பிரேம் சாய் சொல்ல வந்திருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். குழப்பும்படியான காட்சிகளை அமைக்கமால், ரசிகர்களை எளிதாக சென்றடைய என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாம்.

கார்த்திக் இசையில் பாடல்கள் அழகாக இருக்கிறது. சந்தீப் கௌடாவின் பின்னணி இசையும் சூப்பர். சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் கலர்புல்லாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ மனதில் இடம்பெறும்.
சூர்யாவை வளைத்த கீர்த்தி சுரேஷ்..

சூர்யாவை வளைத்த கீர்த்தி சுரேஷ்..




Keerthi-suresh fb

‘எஸ் 3’ படத்தில் மும்மரமாக நடித்துவரும் சூர்யா அதன்பின் முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக யாரை தேர்வு செய்யலாம் என்ற பேச்சு வந்த போது கீர்த்தி சுரேஷின் பெயர் அடிபட்டுள்ளது. கோலிவுட்டில் குறுகியே நாளிலே பெரிய இடத்திற்கு சென்றுள்ள கீர்த்தி சூர்யாவுடன் இதுவரை ஒருபடத்திலும் நடிக்கவில்லை. தற்போது ‘விஜய் 60’ படத்தில் நடித்துவரும் கீர்த்தி அடுத்து சூர்யாவுடன் டூயட் பாடுவார் என பேசிக்கொள்கிறார்கள்.

source : tv.puthiyathalaimurai
thanks to : tv.puthiyathalaimurai
கடந்து வந்த பாதையை மறக்காத விஜய்சேதுபதி...

கடந்து வந்த பாதையை மறக்காத விஜய்சேதுபதி...

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று காலை சென்னையில் நடந்தது.
Vijay14
இதில் கலந்து கொண்டு பேசிய அவர் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து, எந்த வாய்ப்புமே கிடைக்காமல் கடைசியில், வேறு வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில், சீனு ராமசாமி என்னிடம் வந்து அவர் எழுதியிருந்த முழு கதையையும் கொடுத்து என்னை படிக்கச் சொல்லி, அதில் நீதான் நடிக்கவேண்டும் என்று கூறினார். அந்த படம் தான் ‘தென்மேற்கு பருவக்காற்று’. இதுவே எனக்கு திருப்புமுனை. உண்மையில் அவர் தான் என் தர்மதுரை என அவரை புகழ்ந்துவிட்டார்.
எனினும் வந்த பாதையை மறக்கவில்லையாம் சேதுபதி ...

Source: Puthiya thalaimurai, thanks to puthiya thalai murai
ஆகஸ்ட் 5: இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்! - சிறப்பு பகிர்வு

ஆகஸ்ட் 5: இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்! - சிறப்பு பகிர்வு

சந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?



கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாமு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!
காமராஜருக்கு அறிமுகமான குடும்பம். பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில், சிறுவனான சந்திரபாபுவை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!
சந்திரபாபுவுக்கு ஆங்கில அதிகாரிகள், பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள், பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேன்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!
மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது, ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது - பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸ்க்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா!
முதல் படம், 'தன அமராவதி' (1947), கடைசிப் படம் 'பிள்ளைச் செல்வம்' ( 1974). 50-களில் தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!
ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார். எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!
எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான். சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை!

ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!
'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும்போதும் அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!
எஸ்.எஸ்.வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். 'நான் தீக்குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது' என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார்!
சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். 'சகோதரி' படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு'. ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!
ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின்போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநாள் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!
நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். 'சில சமயங்களில் என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது முதல் பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல; அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதவைத் தாழிட்டுக்கொள்பவனும் அல்ல' என்று சொன்னார்!
மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். 'மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம் லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்'' என்றவர்!
'பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு' என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது, 'ஓ ஜீசஸ்!' என்று சொல்லியபடிதான் நுழைவார்!
ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் 'பிறக்கும் போதும் அழுகின்றான்' பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட... உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு. 'கண்ணா நீ ரசிகன்டா' என்று அவரது தாடையைத் தடவ... ஜனாதிபதியும் மகிழ... உற்சாகமானபொழுது அது!
'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!
நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஓவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிப் பழகியவரும்கூட. 'ஆனால், எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்' என்று சிரிப்பார்!
'நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்' என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒருநாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!
'என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம்!' என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

 Source : vikatan. Thanks to vikatan
ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?




தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு  மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல  சந்தேகங்கள் இருக்கின்றன.
ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்?  இதோ, அதற்கான டிப்ஸ்...
*இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு பருப்பு அடர் நிறத்திலோ, இன்னொரு பருப்பு சற்று மங்கியோதான் இருக்க வேண்டும். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
*பெரிய அளவு பழமோ, காயோ, கிழங்கு வகைகளோ அவற்றை தவிர்த்து, சிறிய அல்லது மீடியம் அளவு உணவுகளையே வாங்குங்கள்.
*ஆப்பிள், மாம்பழம், திராட்சையில் அதிகப்படியான பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன என்பதால், இவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். நேர்த்தியான, அழகான கனிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.
*சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.
*ஆர்கானிக் காய்கறிகளாக இருந்தால் அவை சீக்கிரம் வெந்து விடும். நேரம் அதிகமாக தேவைப்படாது.
* புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றில் அவற்றுக்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வர வேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. அதிக ஃபிரெஷ் எனில் சற்று சந்தேகப்படலாம்.







*தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.
*ஒன்றிரண்டு பூச்சிகள், வண்டுகள் இருந்தால் அந்த கீரையையோ, காய் கனிகளையோ தேர்ந்தெடுப்பது நல்லது. பூச்சிக்கொல்லி அடிக்காத உணவுப்பொருட்கள் என கண்டுபிடித்து விடலாம். பூச்சி முழுவதும் பரவி, அழுகி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
*ஒரு ஆர்கானிக் கடையில், இரண்டு பொருட்கள் மட்டும் வாங்கி சமைத்து பாருங்கள். சுவையை அறிந்து கொள்ளுங்கள். அது போல, மற்ற கடையில் உள்ள பொருட்களை வாங்கி சுவைத்துப் பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும். அதன் பிறகு உங்களின் ஷாப்பிங், இனிமேல் எங்கே என்பதை முடிவு செய்யலாம்.
*சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
*கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பாரிலோ, கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்து போகாது.
*அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது  எனக் கேட்டால், தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
*பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.
*அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களிலும் கிடைக்கும்.


Source: Vikatan

ரூ.600 கோடி இலக்கை தொட்ட 'கபாலி. ஒருசில ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி, முதல் தினத்தில் இருந்தே பல சாதனைகளை உடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
வெளியான முதல் நாளே ரூ.48 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரிப்படுத்திய 'கபாலி' இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.211 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த படம் வசூல் செய்த தொகை ரூ.40 கோடி.
 
வெளிநாட்டை பொறுத்தவரையில் அமெரிக்கா, கனடா மட்டுமின்றி மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மிகப்பெரிய வசூலை தந்த 'கபாலி' வெளிநாடுகளில் மட்டும் ரூ.259 கோடி வசூல் செய்துள்ளது.
 
 
 
 
 
ரிலீசுக்கு முன்பே பல முன்னணி நிறுவனங்களுடன் டை-அப் செய்து கொண்டது, இசை வெளியீட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை என ரூ.200 கோடியை இந்த படம் வசூல் செய்திருப்பதால் இந்த படம் மொத்தத்தில் ரூ.650 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் ரூ.700 கோடியை தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் இந்த படம் சீன, ஜப்பானிய, தாய்லாந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படமும் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்திருந்தாலும் அந்த படத்தின் பட்ஜெட்டை விட பாதி அளவே 'கபாலி'க்கு செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் உள்பட இந்த படத்தின் நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் சுமார் ரூ.50-60 கோடி ஆகியுள்ளதாகவும், புரமோஷன் செலவுகளை சேர்த்தால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.75 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. மலேசிய படப்பிடிப்பு மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் செய்த செலவு ஆகும். மேலும் இந்த படத்திற்கு தேவைப்பட்ட விலையுயர்ந்த கார்களை மலேசியாவில் உள்ள தமிழர்கள் இலவசமாகவே கொடுத்து உதவி செய்தனர் என்பதால் இந்த படத்தின் பட்ஜெட் கணிசமாக குறைந்தது.
 
இந்த படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியபோது, "என்னுடைய வாழ்நாளில் 'கபாலி' படத்தை தயாரித்ததை என்னால் மறக்கவே முடியாது. 100 வருட இந்திய திரையுலக வரலாற்றில் 'கபாலி' படம் அனைத்து சாதனைகளையும் தகர்த்துவிட்டது. இந்த படத்தால் எனக்கு கிடைத்த 'மகிழ்ச்சி'க்கு அளவே இல்லை' என்று கூறியுள்ளார். இவர் தயாரித்த 'தெறி' படமும் கடந்த ஏப்ரல் மாதம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கோச்சைடையான்', லிங்கா என இரண்டு சுமாரான ஹிட் படங்களை கொடுத்த ரஜினிக்கு 'பாட்ஷா'வுக்கு பின்னர் கிடைத்த மிகப்பெரிய வெற்றி படமாக 'கபாலி' அமைந்துள்ளது. முதல் நாளில் ஒருசிலர் இந்த படத்திற்கு எதிர்மறை கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.  ஸ்லோவான திரைக்கதை, வன்முறைக்காட்சிகள் அதிகம், ஜாதியப்பார்வை ஆகிய எதிர்மறை கருத்துக்களை தெரிவித்தவர்கள் கூட இந்த படத்தின் வசூலை பார்த்து ஆச்சரியமடைந்து தற்போது அவர்களே பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல்முறையாக பெண்கள் கூட்டத்தை திரையரங்கை நோக்கி வரவழைத்த படம் 'கபாலி' என்று அடித்து கூறலாம். ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் வசூல் முதல் மூன்று நாட்களில் முடிந்துவிடும். ஒரு படம் தொடர்ச்சியாக திரையரங்கில் ஓட வேண்டும் என்றால் குடும்ப ஆடியன்ஸ் சப்போர்ட் தேவை. அது இந்த படத்திற்கு கிடைத்ததுதான் பெரிய பலம்.
 
ஒரு படத்தின் வெற்றி என்பது அந்த படத்தில் நடித்த ஹீரோவுக்கு மட்டுமின்றி கடைநிலை ஊழியர் வரை சந்தோஷப்படுத்தும் விஷயம். இந்த படத்தினால் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியிருப்பது மட்டுமின்றி அவர்களுக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளும் காத்திருக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய படங்கள் என்றாலே இந்தி படங்கள் மட்டும்தான் என நினைத்து கொண்டிருந்த வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ், தென்னிந்தியாவைவும் திரும்பி பார்க்கும் வகையில் உருவாக்கிய 'கபாலி' படக்குழுவினர்களுக்கு நமது மனமார்ந்த 

 
 
source: Indiaglitz
கபாலி பட லாபத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்கு செலவு செய்யவேண்டும்: ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

கபாலி பட லாபத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்கு செலவு செய்யவேண்டும்: ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

201608020813350361_portion-profits-to-social-welfare-spending-kabali-film-High_SECVPFநடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு, சட்டவிரோதமாக கபாலி படத்தை வலைதளங்களில் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தாணு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘கபாலி படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு, இந்தியாவில் உள்ள 169 இணையதள சேவை நிறுவனங்கள், இணையதளம் சேவைகளை வழங்க தடை விதித்து’ கடந்த ஜூலை 15-ந்தேதி உத்தரவிட்டார்.
இவ்வாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டும், கபாலி படம் ஜூலை 22-ந்தேதி காலை 10 மணிக்கு தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே, அதிகாலையில் சில வலைதளங்களில் வெளியாகி விட்டது.
இதுகுறித்து ஐகோர்ட்டில், தாணுவின் வக்கீல் முறையிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.குருமூர்த்தி, ‘இந்த ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்தும், ஒரு சில இணையதள சேவை நிறுவனங்கள் மட்டும்தான் அந்த உத்தரவை மதித்து செயல்பட்டுள்ளது.
25 வலைதளங்களில் கபாலி படம் ஜூலை 22-ந்தேதி அதிகாலை 5 மணிக்கெல்லாம் திருட்டுத்தனமாக வெளியாகி விட்டது. இந்த வலைதளங்களுக்கு, இணையதள சேவை நிறுவனங்களும் சேவை வழங்கியுள்ளது’ என்று கூறி அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதை படித்து பார்த்த நீதிபதி, ‘தடை உத்தரவு பிறப்பித்தும் ‘கபாலி’ படம் எப்படி வெளியானது? படத்தை வெளியிட்ட வலைதளங்களுக்கு எப்படி சேவை வழங்கப்பட்டது? இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், ‘இந்த ஐகோர்ட்டு தடை உத்தரவு நகலுடன், நாட்டில் உள்ள 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், கபாலி படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு சேவைகளை வழங்கக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது’ என்று கூறினார்.
தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் சி.மோகன், ‘மனுதாரர் பிரபலமான இணையதள சேவை வழங்கும் நிறுவனம் மட்டும் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி கபாலி படத்தை வெளியிடும் வலைதளங்களுக்கு சேவை வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்த குறிப்பிட்ட சேவை நிறுவனத்துக்கும், மனுதாரர் நிறுவனத்துக்கும் ‘கபாலி’ திரைப்படம் தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. இதற்காக மற்ற நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தக்கூடாது.
திருட்டுத்தனமாக படத்தை வெளியிடும் ஒரு வலைதளத்தை முடக்கினால், மற்றொரு போலியான பெயரில் அந்த வலைதளம் உருவாக்கப்பட்டு, படத்தை வெளியிட்டு விடுகின்றனர்’ என்று கூறினார்.
‘அப்படிப்பட்ட வலைதளங்களை தடுக்க தொழில்நுட்ப வசதிகள் இல்லையா? மத்திய அரசிடம் இதுதொடர்பான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? இல்லையா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், ‘இதுகுறித்து மத்திய அரசு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், மனுதாரர் ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்களின் கருத்துகளை கேட்டு, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இதன்பின்னர் நீதிபதி, ‘தமிழகத்தில்தான் திருட்டு சி.டி.க்கள் அதிகம் வெளியாகுகின்றன. ஆந்திர, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த பிரச்சினை பெரிய அளவில் இல்லை. அங்குள்ள மக்கள் தியேட்டருக்கு சென்றுதான் படம் பார்க்கின்றனர். அதனால்தான் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட ‘பாகுபலி’ என்ற திரைப்படம் வெற்றிப் பெற்றது.
எனவே, தமிழகத்தில் மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை? இதற்கு தியேட்டர் கட்டணம் ஒரு காரணமா? ஏன் என்றால், தியேட்டர் கட்டணம் தொடர்பாக இந்த ஐகோர்ட்டில் தேவராஜன் என்பவர் முன்பு மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறிய விவரங்கள் தீவிரமானது.
ஆனால், முதல் நாள் அரசுக்கு மனு அனுப்பி விட்டு, மறுநாள் வழக்கு தொடர்ந்ததால், அவரது இடைக்கால மனு தள்ளுபடி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தமிழக அரசு கடைசியாக தியேட்டர் கட்டணம் எப்போது நிர்ணயம் செய்தது? தற்போது ரசிகர்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பதில் மனுவாக தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் கூறினார்.
இதற்கு அரசு வக்கீல் ஆர்.எம்.முத்துகுமார், அடுத்த விசாரணையின்போது, இந்த விவரங்களை தாக்கல் செய்வதாக கூறினார்.
மேலும் நீதிபதி கிருபாகரன், ‘கபாலி படம் பல நூறு கோடிக்கு மேல் வசூலை அள்ளி குவித்துள்ளது என்கின்றனர். இதனால், அந்த படத்தை தயாரித்த நிறுவனம் பெருநிறுவனமாக கருதப்படுகிறது. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தின்படி, பெருநிறுவனங்கள் சமுதாய பொறுப்புடன் செயல்படவேண்டும்.
அதன்படி, இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில், ஒரு பகுதியை அந்த நிறுவனம் சமுதாய நலனுக்காக செலவு செய்யவேண்டும். இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால், பிறப்பிக்க தயாராக உள்ளேன்’ என்று கருத்து தெரிவித்தார்.
அதற்கு தாணுவின் வக்கீல், ‘ஏற்கனவே மனுதாரர் பல உதவிகளை செய்து வருகிறார். கபாலி படத்தின் மூலம் கிடைத்த வருவாயிலும் ஒரு பகுதியை அதேபோல சமுதாய நலனுக்கு செலவு செய்வார்’ என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட வக்கீல் மோகன், ‘கபாலி படத்தின் மூலம் ஒரு பக்கம் வருமானம் வந்தாலும், ஊரெல்லாம் அந்த படத்தின் சுவரொட்டிகளை விதிகளை மீறி ஒட்டியுள்ளனர்’ என்றார்.
உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் குறிக்கிட்டு, ‘நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நடைபாதையை மறித்து மிகப்பெரிய விளம்பர பலகையை வைத்துள்ளனர்’ என்றார்.
இதற்கு நீதிபதி, ‘நானும் சாலைகளில் உள்ள சுவரொட்டிகளை பார்த்தேன். இது சம்பந்தமாக தனியாக விசாரிக்கலாம். வருமானம் ஒரு பக்கம் வந்தாலும், திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க திரைத்துறையினரும் முன்வரவேண்டும்.
தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட குழுவை உருவாக்கி, திருட்டுத்தனமாக படம் வெளியாவதை தடுக்க வேண்டும். இதுபோன்ற குழுவை பிற மாநிலங்களில் உள்ள திரைப்படத்துறையினர் அமைத்துள்ளனர்’ என்று கருத்து தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

source : tamil cinema News
இந்தியாவின் நம்பர் 1 யார்? வெளிவந்த மெகா கருத்துக்கணிப்பு

இந்தியாவின் நம்பர் 1 யார்? வெளிவந்த மெகா கருத்துக்கணிப்பு


 இந்தியாவின் நம்பர் 1 யார்? வெளிவந்த மெகா கருத்துக்கணிப்பு - Cineulagam





இந்திய சினிமாவை பொறுத்தவரை வசூல் வைத்த நமபர் 1 தீர்மானிக்கப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் சல்மான் கானே இந்தியாவின் நம்பர் 1 என கூறப்பட்டது.
இந்நிலையில் வட இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று சில நாட்களாக சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்தை வைத்து யார் நம்பர் 1? என கருத்துக்கணிப்பை நடத்தியது.
இதன் ரிசல்ட் இன்று வெளிவந்துள்ளது, கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளில் 62% வாக்குகள் பெற்று ரஜினி இந்த கருத்துக்கணிப்பில் வென்றுள்ளார். இவை அனைத்திற்கும் கபாலியின் பிரமாண்ட வெற்றியே காரணம் என கூறுகின்றனர்.
ரஜினியின் டுவிட்டரை Hack செய்த விஷமிகள்

ரஜினியின் டுவிட்டரை Hack செய்த விஷமிகள்


ரஜினியின் டுவிட்டரை Hack செய்த விஷமிகள் - Cineulagam 


இப்போதெல்லாம் பிரபலமான நபர்களின் டுவிட்டர் பக்கங்கள் அவ்வப்போது ஹேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் சினிமா பிரபலங்களுக்கு இதுபோன்று நிறைய நடக்கிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் உடனடியாக ரஜினியின் டுவிட்டர் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தற்போது இயல்பு நிலையில் உள்ளதாம். இந்த தகவலை ரஜினியின் மகள்கள் செளந்தர்யா மற்றும்ஐஸ்வர்யா தங்களது டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர்.





source : cineulagam
'கபாலி’ படம் பார்த்தார் வைரமுத்து!

'கபாலி’ படம் பார்த்தார் வைரமுத்து!




மெரிக்காவில் இருந்து கடந்த 25-ம்தேதி காலை சென்னை வந்தார், ரஜினி. 'கபாலி குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த அனைத்துச் செய்திகளையும் குடும்பத்தினர் ரஜினி பார்வைக்குக் கொண்டு வந்தனர். எல்லாவற்றையும் பார்த்த ரஜினி பிரமித்துப் போனார். ஏற்கெனவே அமெரிக்காவில் 'கபாலி' படத்தை மினி திரையரங்கில் பார்த்த ரஜினி மீண்டும் சென்னையில் ஒருமுறை 'கபாலி'யை பார்க்க ஆசைப்பட்டார். தனது வீட்டில் இருந்து தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணுவுக்கு போன் செய்தார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரில் செய்து கொண்ட சிகிச்சைக்குப் பிறகு சோ வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தார். ரஜினி அழைக்கவே, மறுப்பேதும் சொல்லாமல் 'கபாலி' படத்தைப் பார்க்க ஒப்புக்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃப்ரிவ்யூ தியேட்டருக்கு 27-ம்தேதி மாலை வருகை புரிந்த சோ மற்றும் ரஜினியை வாசலில் நின்று வரவேற்றார், கலைப்புலி தாணு. தனது மகள், பேத்தியுடன் வந்திருந்தார், சோ.

'கபாலி' திரையிடப்பட்டது படம் முடிந்து வெளிவந்த சோ 'பேஷ் பேஷ் படம் ரொம்ப நன்னாயிருக்கு' என்று தாணுவிடம் பாராட்டு தெரிவித்தார். ' நான் 'சிவாஜி', 'எந்திரன்' படத்தைக்கூட பார்க்கணும்னு போன் பண்ணி கேட்டது இல்லை. 'கபாலி' படத்தைத்தான் பார்க்கணும்னு உங்ககிட்டே போன் செய்து கேட்டேன்' என்று தாணுவிடம் சொல்லிவிட்டு 'ஹா.. ஹா..' என்று தனது ட்ரேக மார்க் சிரிப்பை உதிர்த்தார்.
ஒரு விழாவில் ‘வார்த்தை வசப்படாமல்’ வைரமுத்து, கபாலி தோல்வி என்று பேசிவிட, சர்ச்சையானது. அந்தச் சர்ச்சைக்குப் பின் வைரமுத்து ரஜினியை நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். அதனால், வைரமுத்துவுக்கு பதில் சொல்லும்விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட், இன்று 'கபாலி' சக்ஸஸ் சந்திப்பாக நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. 'நான் 'கபாலி' படத்தை பார்க்கணும்' என்று ரஜினியிடம் போனில் கேட்டார், வைரமுத்து. இப்போது (மாலை ஏழு மணி) அதே நுங்கம்பாக்கம் ஃப்ரிவ்யூ தியேட்டரில் வைரமுத்து 'கபாலி' படம் பார்த்தார். அவருடன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் படம் பார்த்தனர்.
அமலாபால் – டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு

அமலாபால் – டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு

201607260856492132_Amala-Paul-Director-Vijay-decided-to-divorce_SECVPF
 அமலாபால், கேரளாவை சேர்ந்தவர். கடந்த 2010-ம் ஆண்டில், ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, ‘சிந்து சமவெளி,’ ‘மைனா,’ ‘தெய்வ திருமகள், ‘தலைவா,’ ‘வேலையில்லா பட்டதாரி,’ ‘அம்மா கணக்கு’ உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக ‘வட சென்னை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கும், ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகி, ‘மதராச பட்டினம்,’ ‘தலைவா,’ ‘தாண்டவம்,’ ‘சைவம்,’ ‘இது என்ன மாயம்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ள விஜய்க்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது.
விஜய் டைரக்டு செய்த ‘தலைவா,’ ‘தெய்வ திருமகள்’ ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 12-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.
அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை டைரக்டர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய்-அமலாபால் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிவது என்று முடிவு செய்தார்கள்.
அதன்படி, அமலாபால், டைரக்டர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். டைரக்டர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார்.
இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த விவகாரம், தமிழ்-மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இணையதளத்தில் ஹீரோக்களான கணேஷ் வெங்கட்ராமன் - ஈரோடு மகேஷ்

இணையதளத்தில் ஹீரோக்களான கணேஷ் வெங்கட்ராமன் - ஈரோடு மகேஷ்


அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நீண்டஇடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘இணையதளம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், சின்னத்திரையில் காமெடியில் கலக்கிவரும் ஈரோடு மகேஷும் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை சுகன்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சங்கர்-சுரேஷ் என்ற இரட்டையர்கள் இயக்குவதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை ஏ.வி.எம்.ஸ்டுயோவில் பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கோயம்புத்தூரை கதைக்களமாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படம் கிரைம் திரில்லராக உருவாகவிருக்கிறது. அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். அனுகிரஹா ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.




source: Maalaimalar
'கபாலி' இரண்டாம் பாகம் குறித்து தாணுவின் கருத்து

'கபாலி' இரண்டாம் பாகம் குறித்து தாணுவின் கருத்து

 ரஜினி நடிப்பில் கடந்த ஜுலை 22-ந் தேதி வெளிவந்த ‘கபாலி’ இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இரண்டாம் பாகம் வரும் என்பதுபோல முடிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, ‘கபாலி’ இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ‘கபாலி’ படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்குக்கூட தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
எனினும், ‘கபாலி’ இரண்டாம் பாகத்தில் ரஜினி மீண்டும் நடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், ‘கபாலி’ படத்திற்கு ஒருபக்கம் நல்ல விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளது

Source: Puthiyathalimurai

Related Posts

Related Posts