லிங்கா பிரச்னையை காரணம் காட்டி கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள கபாலி படம் நாளை(ஜூலை 22ம் தேதி) பிரமாண்டமாக உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் லிங்கா படத்தின் போது ஏற்பட்ட நஷ்டத்தை காரணம் காட்டி, கோவையை சேர்ந்த சுக்ரா என்ற நிறுவனம், லிங்கா படத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கபாலி படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் நேற்று வழக்கு தெடாடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ரஜினி, தாணு, ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டததோடு, வழக்கை இன்றைக்கு தள்ளி வைத்தது.</p><br><p>இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா நஷ்டத்தை காரணம் காட்டி கபாலி படத்தை தடை விதிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டதோடு, இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தார். மேலும் லிங்கா படம் நஷ்டம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி பெற்று கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.
source : cinema.dinamalar
EmoticonEmoticon