பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ருக்மிணி விஜயகுமார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும்கூட. இப்படத்திற்கு பிறகு ‘கோச்சடையான்’, ‘ஷமிதாப்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த ருக்மிணிக்கு பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்கள் அமையவில்லை.
இந்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் ருக்மிணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் ருக்மிணி கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சாரதா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், மலையாள நடிகை லலிதா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்படவிருக்கிறது. இது ஒரு ரொமான்டிக் கதையாக உருவாகவிருக்கிறது.
EmoticonEmoticon