திரையுலகத்தையும் தொற்றிக் கொண்ட கபாலி ஜுரம் திரையுலகத்தையும் தொற்றிக் கொண்ட கபாலி ஜுரம்

201607201136083007_Kabali-fever-affect-cinema-industry_SECVPF

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் உலக சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் தன்வசம் ஈர்த்துள்ளது. வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘கபாலி’ படத்தை முதல்நாளே பார்த்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் ரஜினி ரசிகர்கள் என்பதால், ‘கபாலி’ படத்தை பார்ப்பதற்காக படப்பிடிப்புக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். ஏற்கெனவே, ரஜினியின் தீவிர ரசிகரான வெங்கட்பிரபு, தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’யில் பணிபுரியும் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தை பார்ப்பதற்காக விடுமுறை அளித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து தற்போது ஜெய்-அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பலூன்’ படக்குழுவும் ‘கபாலி’ படத்தை பார்க்க படக்குழுவினருக்கு விடுமுறை அளித்துள்ளது. ‘பலூன்’ படத்தை சினிஷ் இயக்குகிறார். 7MM நிறுவனம் சார்பில் டி.என்.அருண்பாலாஜி, கந்தசுவாமி நந்தகுமார் ஆகியோருடன் பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் நிறுவனம் சார்பில் திலீப் சுப்பாராயனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
‘கபாலி’ படத்தை பார்ப்பதற்காக சில தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடடத்தக்கது.

Source: tamilcinema.news


EmoticonEmoticon