லிங்கா’ படத்தின் இழப்பை ஈடுகட்டும் வரை ‘கபாலி’ திரைப்படத்தை வெளியிட தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவையில் ‘லிங்கா’ படத்தை விநியோகித்த சுக்ரா பிலிமஸ் பட நிறுவனத்தின் பங்குதாரர் மகாபிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘லிங்கா’ படத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட கோவை பகுதிக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 89 லட்ச ரூபாயை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆகையால், அந்த தொகையை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு வசூலித்து தரும் வரை, ‘கபாலி’ படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, ரஜினிகாந்த், தாணு, கோவை விநியோகிஸ்தர் சங்கம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
source : Puthiyathalaimurai
EmoticonEmoticon