ராதிகா தயாரித்து நடிக்கும் வாணி ராணி தொடர் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமான ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல் இவர் தயாரிக்கும் தாமரை தொடரும் 500 எபிசோட்களை தாண்டியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ராதிகா தனது அலுவலக ஊழியர்கள் மற்றும் கலைஞர்களுடன் கொண்டாடியுள்ளார்.
அப்போது அவர் பேசும்போது, நான் சின்னத்திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. இதில் நிறைய கற்றுக்கொண்டேன், முக்கியமாக உழைப்பு. இங்கு உழைச்சிக்கிட்டே இருந்தா தான் ஜெயிச்சிக்கிட்டே இருக்க முடியும்.
இத்தனை வருடம் நான் நிலைச்சு நிற்கிறேன்னா அதுக்கு உழைப்பைத் தவிர வேற காரணம் எதுவுமில்லை என்றார்.
EmoticonEmoticon