
காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன், விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன் என்று தன் ரசிகர்களுக்கு வாட்ஸப் குரல்பதிவு மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாச ன் கடந்த வியாழனன்று நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந் தார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவி வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவரது குரலில் வாட்ஸப் பதிவு ஒன்று ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது. அதில் பேசியுள்ள கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:
எனது உடல்நலம் குறித்தது கவலைப்படும் ரசிகர்களை எண்ணி மனம் நெகிழ்ந்தேன். என்னை உங்கள் குடுமபத்தில் ஒருவனாக எண்ணி அக்கறை காட்டுவதற்கு நன்றி. இதற்கு கைம்மாறாக நான் செய்யக் கூடியது எதுவும் இல்லை.
இதற்கு முன் பல விபத்துக்கள் நடந்தும் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதே இதற்கு காரணம். இதில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்.
எனது ரசிகர்களுக்கு எனது உடல்நலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை.
மிக விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன்.
இவ்வாறு அந்த வாட்ஸப் குரல்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EmoticonEmoticon