சென்னை: கபாலி பட டிக்கெட்டுக்களுக்காக தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் பி.ஏ. சிபாரிசு கடிதம் அளித்ததாக ஒரு செய்தி வாட்ஸ்ஆப்பில் உலா வருகிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை வெளியாக உள்ளது. இதனால் திரும்பும் பக்கம் எல்லாம் கபாலி பேச்சாகவே உள்ளது. இந்நிலையில் தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சரின் பி.ஏ. அதாங்க உதவியாளர் டிக்கெட் கேட்டு அபிராமி தியேட்டருக்கு சிபாரிசு கடிதம் எழுதியுள்ளாராம். அவர் கடிதத்துடன் கூடிய இந்த செய்தி வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது. அதை அப்படியே உங்களுக்கும் தெரிவிக்கலாம் என நினைத்தோம்.
Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-minister-s-pa-writes-letter-a-theatre-kabali-tickets-258529.html
EmoticonEmoticon