‘கபாலி’ படத்தைப் பார்க்க பெங்களூருவிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரசிகர்கள் வருகை: அஞ்சல்துறை சிறப்பு உறை வெளியிடுகிறது



கபாலி திரைப்படத்தை பார்ப் பதற்காக பெங்களூருவிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரசிகர்கள் வரவுள்ளனர். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகை யில், அஞ்சல் துறை சார்பில் நினைவு உறைகள் வெளியிடப் படவுள்ளன.
இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலக்சாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வரும் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைக் காண்பதற்காக ரஜினி ரசிகர்களை சிறப்பு விமானத்தின் மூலம் பெங்களூருவிலிருந்து சென் னைக்கு ஏர் ஏசியா நிறுவனம் அழைத்து வருகிறது. படத்தைப் பார்த்த பிறகு, அன்றைய தினமே அவர்களை பெங்களூருவுக்கு திரும்ப அழைத்துச் செல்கிறது.
ஒரு படத்துக்காக சிறப்பு விமா னம் இயக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வை கொண்டாடும் பொருட்டு இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் தலைகள் சேமிப்பு பிரிவு, சிறப்பு நினைவு உறைகளை வெளியிடவுள்ளது. அந்த நினைவு உறைகள், பெங்களூருவிலிருந்து விமானத்தில் வரும் ரசிகர்களுடன் பயணிக்கும். பின்னர் அவை அஞ்சல் தலை சேமிப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


EmoticonEmoticon