சென்னையில் முதன்முறையாக ஜூலை 28 முதல் 31 வரை கன்னட திரைப்பட விழா


தமிழ், கர்நாடக கலைஞர்களின் நல்லுறவைப் பேணும் வகையில், கன்னட திரைப்பட விழா சென்னையில் முதன்முறையாக ஜூலை 28 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையில் கர்நாடக சலன சித்ரா அகாதெமி தலைவர் ராஜேந்திர சிங் பாபு நிருபர்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியது:-
கர்நாடக சலனச் சித்ரா அகாதெமி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, இந்தோ - சினி அப்ரிசிசேயஷன்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சென்னையில் இந்த விழாவை நடத்துகின்றன. கர்நாடக திரைப்பட வரலாற்றில் ரசிகர்களின் கவனம் பெற்ற திதி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி, ரேங்ராஜூ, ராங்கி டங்கரா, சிவலிங்கா, கர்வா, யூ டர்ன், மாரிக் கொண்டவாரு ஆகிய படங்கள் சென்னையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் உள்ள திரையரங்கத்தில் திரையிடப்படவுள்ளன.
ஜூலை 28-இல் நடைபெறும் தொடக்க விழாவில், கர்நாடக அமைச்சர்கள், திரையுலகத்தினர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
பேட்டியின்போது கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் டெங்குராஜ், இந்தோ - சினி அப்ரிசியேஷன்ஸ் அமைப்பின் தலைவர் தங்கராஜ், நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


EmoticonEmoticon