கடந்த 15 ம் தேதி துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சியில்ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அரசு தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நேரத்தில் துருக்கியில் நடைபெற்ற பள்ளி அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். இதில் தமிழக வீரர், வீராங்கனைகளும் உண்டு. இதனையடுத்து இந்த வீரர்களை பத்திரமாக அழைத்து வர தமிழகம் மற்றும் மத்திய அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று வீரர்கள் 9 பேர் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் அரசு எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
EmoticonEmoticon