கடுமையாக உழையுங்கள்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் அறிவுரை

புதுடில்லி: சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாட பா.ஜ., முடிவு செய்துள்ளது. தேசிய திட்டங்கள், ஏழைகளுக்கு ஆதரவாக, ஆகஸ்ட் 15 முதல் 22 வரை ஒரு வாரம் திரங்கா யாத்ரா மேற்கொள்ளவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இன்று நடந்த பா.ஜ., பார்லிமென்டரி கூட்டத்தில் இந்த முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு கட்சி தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இறுதிமுடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு வருட அரசின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறியது பற்றியும், இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது பற்றியும் பிரதமரிடம் எடுத்துக்கூறினர்.

அப்போது பிரதமர் கூறுகையில், மக்கள் நல்ல மன நிலையில் உள்ளனர். இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சூழ்நிலையை தொடர்ந்து கவனிக்க வேண்டும். எம்.பி.,க்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தீவிரமாக ஆராய்ந்து, விவாதத்தை பலனை அதிகரிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய சட்டங்கள் குறித்து மத்திய பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார் எம்.பி.,க்களிடம் எடுத்துக்கூறினார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றி விளக்கிக்கூறினார்.


EmoticonEmoticon