
புதுடில்லி: வரும் 27 ம் தேதி கலாம் நினைவிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். கலாம் நினைவிடம் கட்டும் பணி கால தாமதம் ஆவது குறித்து லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர்; மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் ராமேஸ்வரத்தில் கட்டுவதற்கு மத்திய அரசு தரப்பில் 5 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு 1. 5 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தி தந்துள்ளது. இருப்பினும் இன்னும் காலம் தாழ்த்த மாட்டோம். வரும் 27 ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நிச்சயம் நடக்கும். இவ்வாறு அமைச்சர் பாரிக்கர் தெரிவித்தார்.
EmoticonEmoticon