வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி!



இயக்குநர் வெற்றி மாறன் மூன்று பாகங்களாக எடுக்கும் வட சென்னை படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.
தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் முதல் பாகம் சமீபத்தில் தொடங்கியது. தன்னால் மூன்று பாகங்களிலும் நடிக்க முடியாததால் நடிகை சமந்தா இந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அமலா பால் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னும் அதிகமாகியுள்ளது. 


EmoticonEmoticon