இயக்குநர் செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படத்தில்
எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கெளதம் மேனன் தயாரிப்பில்,
நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா
இசையமைக்கிறார்.
இதற்கு அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சந்தானம்
நடிக்கவுள்ளார். இந்தத் தகவலை இருவருமே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்கள்.
செல்வராகவன் - சந்தானம் கூட்டணி தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தை
ஏற்படுத்தியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த
தில்லுக்கு துட்டு, வசூல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக சர்வர்
சுந்தரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்நிலையில்
செல்வராகவன் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
EmoticonEmoticon