நடிகை சமந்தா புதுப்படங்கள் ஒத்துக்கொள்ளாதது ஏன் தெரியுமா?


பிரபல நடிகை சமந்தா தான் என் தற்போது புதிய படங்கள் எதிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி இருக்கிறார்.
நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைதளமான டிவிட்டரில் உரையாடிக் கொண்டிருந்தார்.  அப்பொழுது ஒரு ரசிகர் சமந்தா தற்போது  புதுப்படங்கள் ஒத்துக்கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சமந்தா தனது முந்தைய படங்களான 'தெறி ', '24', 'அ.ஆ'  (தெலுங்கு) ஆகியவற்றை விட மிகச் சிறப்பான  ஒரு படத்தை கொடுக்க விரும்புவதாகவும்,ஆனால் அவ்வாறான ஒரு கதை கிடைப்பது கடினம் என்றும் தெரிவித்தார்.
சமந்தா நடித்து இந்த ஆண்டில் இதுவரை நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. தற்பொழுது அவர் தெலுங்கு ஆக்க்ஷன் படமான 'ஜனதா காரேஜ் ' வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.


EmoticonEmoticon